மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டுக்கூடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பக்தர்களுக்கு அருள் மற்றும் ஞானத்தை வழங்கிய ஆங்கில புத்தாண்டின் முதலாம் நாளை கல்பதரு நாளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பெருமைகள் குறித்து உரையாற்றினார். கல்லூரியின் பஜனை குழு ஒருங்கிணைப்பாளர் தர்மானந்தம் மற்றும் பஜனை குழு மாணவர்கள் நாமாவளி, தினசரி தியானம், காயத்ரி மந்திரம் மற்றும் பஜனை பாடல்கள் பாட அனைத்து மாணவர்களும் இறைவனை வழிபட்டனர். கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த, கல்லூரி முதல்வர் தி.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சந்திரசேகரன், முனைவர் கணேசன், முனைவர் காமாட்சி, தினகரன், இரகு, முனைவர் சௌந்தர்ராஜு, முனைவர் எல்லைராஜா, மாரிமுத்து, நாகராஜ், முனைவர் குமாரசாமி, முனைவர் முருகன், செல்வகுமார், பிரசாந்த் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



