மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தலைமை
தாங்கி ,மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திமுக மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகரச் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, வரவேற்றார். பள்ளியில், 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் , அருண்குமார், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மகாலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, துணைத் தலைவர் ராமராஜ், தேவசேரி ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணி (எ)சசி, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டலை தவசதீஷ்,
நகர இளைஞரணி பிரபு, மாணவரணி யோகேஷ், பொறியாளர் அணி ராகுல், பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் முருகன், நன்றி தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





