மதுரை : மதுரை மாவட்டம், அச்சம்பத்தில் உள்ள மகிழ்ச்சி இளம் பள்ளியில் நாட்டின் மாமேதை கல்வித்தந்தை காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளியின் தாளாளர் நித்யா தேவி தலைமை வகித்தார். பள்ளியின் நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் , சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டு, காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து மாணவர்களுக்கு கதைகளாக விவரித்து சொன்னார்.
இந்த விழாவை, மேலும் மகிழ்ச்சிகரமாக்கும் வகையில், மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் வண்ண பென்சில்கள் வழங்கப்பட்டன. விழாவின், திட்டமிடல் மற்றும் நடத்தியமைக்காக பள்ளி ஆசிரியர்கள் சிறப்பான பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி