திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்விக்ரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மீஞ்சூர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் மற்றும் பொன்னேரி வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பெரவள்ளூர் செ.ராஜா கலந்து கொண்டு பழவேற்காட்டில் உள்ள மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்தும் பொன்னேரி தொகுதியில் உள்ள பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தார் இந்த கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் மயில்ராஜ், பரமானந்தம், வழக்கறிஞர்கள் கார்த்திக், ராஜசேகர், வள்ளல், நித்திஷ், பிரவீன் சமூக ஆர்வலர்கள் வெற்றி,குடியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு