மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கள்ளிவேலிபட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி, கோரிக்கை மனுக்கள் பெறுவதை தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வள்ளி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், சமூக நலத்துறை தாசில்தார் பார்த்திபன், திமுக ஒன்றிய ச்செயலாளர் அருண் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் வரவேற்றார்.
இந்த முகாமில், கள்ளிவேலிபட்டி, கொண்டையம்பட்டி, மேலச்சின்னம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர். மகளிர் உரிமை தொகை, மாற்றத் திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, வீட்டுவசதி, ஆதார் சேவை உள்ளிட்ட 15 அரசு துறைகளுக்குரிய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த நிகழ்வில்,
திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், மற்றும் திமுக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி