செங்கல்பட்டு: செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்ளாட்சிப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினராக விண்ணப்பம் செய்து வாய்ப்பு வழங்கிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுவின் சார்பில் நன்றி தெரிவித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் எதிர்வரும் பருவ மழை காலங்களை எதிர்கொள்ளும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஒன்றிய குழு உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் இளங்கோவன் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் குணசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்