விருதுநகர்: தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன், ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வுக் கூட்டம். காரியாபட்டியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சண்முக சுதாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக கம்பிக்குடி முருகன் மாவட்ட தலைவராக பரளச்சி பசுபதி பொருளாளர் முருகபாண்டி, காரியாபட்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ், அருப்புக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் , திருச்சுழி ஒன்றியச் செயலாளர் முத்து கிருஷ்ணன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் வேல்முருகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகரம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





