செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பட்டரவாக்கம் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், இன்று நடந்தது. இந்த முகாமை, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசுதனன் ஆய்வு செய்து, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பட்டரவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துர்கா செல்வராஜ் தலைமையில், நடைப்பெற்ற
இம்முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் வாயிலாக, 46 சேவைகள் வழங்கப்பட்டது. இதில், வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.
இதில், அதிகபட்சமாக, மகளிர் உரிமைத் தொகை வேண்டி உள்ளிட்ட,400 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாமில், பட்டரவாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா சிவா மற்றும் வார்டு உறுப்பினர்கள், அப்பகுதி மக்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





