செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்க்கும் சிறப்பு மனுபெறும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன் சிந்தியா சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் காட்டாங்கொளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ராஜன் காட்டாங் கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் ,ஒன்றிய கவுன்சிலர் சங்கமித்திரை கருணாகரன், மத்திய ஒன்றிய அவை தலைவர் வி .ஜி திருமலை ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இந்த முகாமில் வருவாய்த்துற, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது
இதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். முன்னதாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் முதியோருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், மீனாட்சி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும்
மேலமையூர் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் இராமனுஜம் மற்றும் இதில் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





