செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய உட்பட்டட அஞ்சூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ஒன்றிய கழக செயலாளர் ஆப்பூர் சந்தானம் , ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இந்த முகாமில் வருவாய்த்துற, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது
இதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ராஜேந்திரன் மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர் கிளைச் செயலாளர் கட்சி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், நவீன், வெங்கடேஷ், ரவி, மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





