செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் ஜி.ஆர்.கே மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்த முகாமில் வருவாய்த்துறை. மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது
இதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





