மதுரை : மதுரை மாநகராட்சி “புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடம், ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தொட்டி மற்றும் அங்கன்வாடி மையக்கட்டிடம்” தகவல் தொழில்
நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்
பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.50 க்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டிடம், ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தொட்டி மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தினை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் , பயன்பாட்டிற்கு இன்று
திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.50 தைக்கால் தெரு பகுதியில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டிடம், வார்டு எண்.50 தைக்கால் 1வது தெருவில் ரூ.4.99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தொட்டி, வார்டு எண்.50 ஆதிமூலம் பிள்ளை பள்ளி வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும்,
அமைச்சர், மேயர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி உட்பட மாநகராட்சி மற்றம் இதர அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





