திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தேமுதிக நிறுவனர் மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றிய, பேரூர் கழகங்களின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கணேஷ்குமார் ஏற்பாட்டில் மீஞ்சூர் நகர செயலாளர் எஸ்.ஜெ.பிரகாஷ் முன்னிலையில் மீஞ்சூர் பஜாரில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவ படம் காட்சிக்காக வைக்கப்பட்டு படத்திற்கு மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளியவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம்.டில்லி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை எளியவருக்கு அன்னதானங்களை வழங்கினார். இதில் நகர நிர்வாகிகள் எஸ்.ஜெயபிரகாஷ், நகரச் செயலாளர் வீரப்பன்,நகரத் துணைச் செயலாளர் ராஜா, கிருஷ்ணா, லோகநாதன்,ஆட்டோ சுரேஷ், பாலாஜி அரியன்வாயல் ஷேக் மற்றும் தேமுதிக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு





