சென்னை: வடசென்னை அனல் மின் நிலையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் தேங்கியுள்ள சாம்பல் கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகள் ரூபாய் 28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. டிரெஜ்ஜர் இயந்திரம் கொண்டு நடைபெற்று வரும் இந்த பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரதாப், சாம்பல் கழிவுகளை அகற்றி அதனை அப்புறப்படுத்துதல் மற்றும் ஆற்றை தூர் வாரும் பணிகள் குறித்து துணை முதலமைச்சருக்கு எடுத்துரைத்தார். கொசஸ்தலை ஆற்றை தூர் வாரும் பணிகள் தொடர்பாக வரைபட விவரங்களுடன் அளித்த விவரங்களை துணை முதலமைச்சர் கேட்டறிந்தார். வெள்ள தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொசஸ்தலை ஆற்றில் நீர் எளிதாக செல்லும் வகையில் கால்வாய்களை தூர் வாரிட வேண்டும் எனவும், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகளை விரைந்து முடித்திடவும் அப்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு





