மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் 1200 க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்காளர் பட்டியலை பிரித்து புதிய வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்கு பதிவு அலுவலரான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் பான்மையினர் நல அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி வாக்கு பதிவு அலுவலர் தாசில்தார் பார்த்திபன் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





