விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, மதச்சார் பின்மை காப்போம் தீர்மான விளக்கம் மற்றும் தேர்தல் அங்கீ கார வெற்றி விழா பொதுக் கூட்டம் காரியாபட்டி யில் நடை பெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் இனியவன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் ஜோசப், துணைச் செயலாளர் வல்லரசு, மாவட்ட துணை செயலாளர் போத்தி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துபாண்டி வரவேற்றார். கூட்டத்தில், விடுதலை சிறுத்தை மாநில துணை பொதுச் செயலாளரும் .எம்.எல்.ஏ. வுமான ஆளுர்.ஷா நவாஸ் சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் , இராமநாத புரம். எம்.பி நவாஸ்கனி, மாவட்ட துணைச் செயலாளர் பாக்கியராஜ், மண்டல செயலாளர் முருகன் . ஒன்றிய ச் செயலாளர்கள் ஜெயப் பாண்டி, பூமிநாதன் இராமநாதன், முகிலன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தேவிலட்சுமி சூசைராஜ் , ஆசிர்வாதம் , பாப்பணம் காவியன் , முத்து கணேஷ் , கார்த்தி கருப்பு உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





