மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 10 முதல் 18 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணா மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமை, வெங்கடேசன் எம்.எல். ஏ. துவக்கி வைத்து ஆய்வு செய்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன், தாசில் தார் ராமச்சந்திரன்,
சமூக பாதுகாப் பு திட்ட தாசில்தார் பார்த்திபன், பேரூராட்சித் தலைவர் பால்பாண்டிய ன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இந்த முகாமில், தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் பேரூ ராட்சித் தலைவர் கிருஷ்ண வேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர் கள் ஜெயகாந்தன் பூமிநாதன், ஐ குருநாதன், கார்த்திகா ராணி மோகன், சுசீந்திரன், இளைஞர் அணி வினோத் தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்தன் இளநிலை உதவியாளர்கள் முத்து பாண்டி, தனலட்சுமி, சுகாதார பணி மேற்பார்வையாளர் சுந்தர் ராஜன் உள்பட பல துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், பிற்பட்டோர் நலத்துறை நலத் துறை ஆதி திராவிடர் நலத்துறை மாற்றுத்திறனாளிக ளுக்கான துறை சிறப்பு திட்ட செய லாக்க துறை உள்ளிட்ட15 துறைக ளின் சார்பாக கூடங்கள் அமைக்கப் பட்டது. இதில், மகளிர் உரிமை தொகைக்கு 456 மனுக்களுடன் மொத்தம் 702 மனுக்கள் பெறப் பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





