மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் சம்பந்தமாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையில் தேர்தல் உதவி அலுவலர் வீர முருகன், முத்துலட்சுமி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில்,
பல்வேறு பூத் சம்பந்தமாக நிறை குறைகளை தெரியப்படுத்தினர். இனி வரும் காலத்தில் தேர்தல் நியாயமானதாக நடத்த வேண்டும் இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சார் ஆட்சியர் தெரிவித்தார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் பற்றி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். தேர்தல் சம்பந்தமாக எந்த ஒரு கேள்வி பதிலுக்காக தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





