செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ஒன்றிய குழு துணை தலைவர் இளங்கோ தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய உட்பட்ட பல்வேறு பகுதிகளை நடைபெற்று பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கை மனுக்களை வரவேண்டிய நிதிகள் போன்றவற்றை ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் அவரிடம் வழங்கினார்கள். இதில் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் குறைகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் காட்டாங்குளத்தூர் ஒன்றுக்கு உட்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏராளமான னோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





