மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி சானாம்பட்டி செல்லகுளம் பெருமாள் பட்டி பகுதிகளில், கருணாநிதி பிறந்தநாள் விழா முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு, வெங்கடேசன் எம். எல் .ஏ. தலைமை தாங்கி நலத்திட்டங்கள் வழங்கினார். இதில், பேரூர் செயலாளர் மு.பால் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஐ.கே.குருநாதன் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிச்செல்வன், அரவிந்தன், வினோத், வார்டு செயலாளர்கள் பிரபு, கணேசன், சுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





