இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட துயரமான வாகன விபத்தில், திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் முஸ்தாக் அகமது அவர்கள் உயிரிழந்தார். உடல் இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் நேரில் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்து நிதியுதவியும் வழங்கினார்.
மேலும், அதே விபத்தில் எதிர்புற வாகனத்தில் பயணித்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பிச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விபத்து மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





