மதுரை: மதுரை, அலங்காநல்லூர் அருகே, பெரிய ஊர் சேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வெங்கடேசன் எம். எல். ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ,ஒன்றியச்செயலாளர் தன்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில், அலங்காநல்லூர் பேரூராட்சி த் தலைவி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், திமுகநகர ச்செயலாளர் ரகுபதி, விழாக் குழுவினர்,பூட்டப்பட்ட வடத்தில் மாடுகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக மைதானத்தில் களம் இறக்கப்பட்டன.மதுரை உள்பட பல மாவட்டப் பகுதிகளில் இருந்து 12 காளைகள் இதில் கலந்து கொண்டன.
ஒரு காளையை அடக்குவதற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 பேர் கொண்ட குழுவினர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
அடக்க முடியாதகாளையின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை, காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் சுற்றுவட்டாரங்களிலிருந்து இந்த மஞ்சுவிரட்டை பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை,
பெரிய ஊர்சேரியைசேர்ந்த விழா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, அலங்காநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





