மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் பாஜக கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கிளை நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிளை நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி பாஜக கட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ( எஸ்ஐ ஆர் ) குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்,
உசிலம்பட்டி ஒன்றியம், நகரம், செல்லம்பட்டி ஒன்றியம்,சேடப்பட்டி ஒன்றியம்,எழுமலை பேரூராட்சி உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், எஸ் .ஐ .ஆர். குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





