செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அடுத்த அஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 102 பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமையில் மற்றும் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். இந்த மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜ் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




