சிவகங்கை: காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாக்கோட்டை ஒன்றியம், சிறுகப்பட்டி ஊராட்சி, முள்ளாங்காடு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய மின்மாற்றியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். மாங்குடி அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதன் மூலம் முள்ளாங்காடு கிராமத்தில் நீண்டநாளாக நிலவி வந்த மின்தடையற்ற மின்விநியோகம் தொடர்பான சிக்கல்கள் தீர்வடையும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





