விருதுநகர்: காரியாபட்டி ஒன்றியத்தில், பல்வேறு கிராமங்களில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் , டி. கடமங்குளம், சின்னகல்லுப்பட்டி, கம்பிக்குடி தடமங்குளம் ஆகிய இடங்களில் சமுதாய கூடங்கள் கட்டுவதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு, மந்திரி ஓடை கிராமத்தில், மாவட்ட ஊராட்சி நிதி திட்டத்தில் 45 லட்சம் மதிப்பிட்டில் புதிய சமுதாய கூடம் அமைக்கப் பட்டது.
புதிய கட்டிடங்களை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பேசினார். ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர்கள் ஜெயராம், உஷா, ஒன்றியச் செயலாளர் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், பேரூராட்சித் தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் அரச குளம் சே கர், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயச்சந் திரன், துணை அமைப் பாளர் முகமது முஸ்தபா, மாவட்ட மாணவர் அணி அமைப் பாளர் கருப்புராஜா
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




