திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு மீனவ மக்கள் அமோக வரவேற்பளித்தனர். ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாட மீனவ மக்களுக்கு அழைப்பு. திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தி மு க ஸ்டாலின் கட்சியில் முக்கிய பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்தார். அதன்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ் ராஜ் நியமிக்கப்பட்டார். அவருக்கு திமுகவினர் பல்வேறு விதங்களில் வரவேற்பு அளித்து வருகின்றனர். மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் ரமேஷ் ராஜிக்கு மீனவ மக்கள் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பழவேற்காடு மார்க்கெட் பகுதிக்கு வந்து அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட சிறுபான்மை நல உரிமை அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டில் மீனவ கிராம மக்களின் வரவேற்பை ஏற்று தூய்மை பணியாளர்களுக்கு தலா 25 கிலோ அரிசி வழங்கினார். பின்னர் பழவேற்காடு மீன் மார்க்கெட் அருகே உள்ள ஆலயத்தில் பழவேற்காடு மீனவ கூட்டுறவு சங்க தலைவர் அரங்கம் நாராயணன் ஏற்பாட்டில் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்று 500 பேருக்கு சிக்கன் பிரியாணியும் 150 பேருக்கு புடவையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு





