மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பத்தாம், 11ஆம், 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முக்குலத்தோர் நல சங்க கௌரவத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோணைமுத்து, செயலாளர் ஆதி முத்துக்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்குலத்தோர் நல சங்கத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வரவேற்றார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் சௌத்ரிதேவர், வல்லப்பா கல்வி
குழும நிறுவனர் வல்லப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர் மாணவ, மாணவிகளுக்கு
பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில், பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





