மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று(16.09.2025)
மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கருப்பாயூரணி எம்.பி. மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை, தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடி, முதலமைச்சரின்
பொது நிவாரண நிதியின் கீழ் விபத்து நிவாரண உதவித் தொகையாக ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,
மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் திண்டியூர் ஊராட்சியில் உள்ள ஈச்சநெறி கண்மாய் வரத்து கால்வாயில் ரூபாய் 2.31 கோடி மதிப்பீட்டில் 33.68 மீட்டர் நீளத்தில் சிறு பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





