திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி அரசினர் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் முகாமிலேயே வழங்கப்பட்டது, மேலும்
பொது மருத்துவம், இதயவியல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம்,தோல் மருத்துவம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், சித்த மருத்துவம் என தனித்தனி துறைகளுக்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முகாமை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரியாராஜ், இணை இயக்குனர் டாக்டர் அம்பிகா, மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முகம்மது ஹசீன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து முகாமை நடத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு





