விருதுநகர்: காரியாபட்டி அருகே, கம்பிக்குடி ஊராட்சி மன்ற அளவிலான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது . மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் (தணிக்கை) முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய ச் செயலாளர் கண்ணன் முன்னிலை. வகித்தார். முகாமில் , கலைஞர் மகளிர் உரிமை தொகை முதியோர் பென்ஷன். பட்டா மாறுதல் கலைஞர் கனவு இல்லம் திட்டம். மகளிர் சுய உதவிக் குழு கடன் உதவி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து ஏராள மான பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. வருவாய் துறை, சமூக நலத் துறை மருத்துவ துறை ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற் றனர். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசிலனைக்கு எடுத்துக் கொள் ளப்பட்ட து. முகாமில், தாசில் தார் மாரீஸ்வரன் நெடுஞ்சாலை துறைசெயற் பொறி யாளர் பாக்கிய லட்சுமி, மாவட்ட சிறப்பு செயலாக்க திட்ட அலுவலர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் . கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





