மதுரை : மதுரை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால், கண்மாய் மற்றும் நீர் செல்லும் பாதைகளை மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்கள். மதுரை மாவட்டம், தேனி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், வைகை அணை வேகமாக பெருகி வருகிறது. கண்மாய்களுக்கும் நீர் வரத்து அதிகமாகியுள்ளது.
கண்மாய்,, நீர் வரத்து பாதைகளை ஆட்சியர் பார்வையிட்டார். மதுரை நகரில் சாலைகளில், தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியை, மதுரை மாநகராட்சி ஆணையருக்கு ஆய்வு செய்தார். பலத்த மழையால், மதுரை சிவகங்கை செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





