திருவண்ணாமலை: அயலகத் தமிழர் நலனுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் — கள ஆய்வு நடைபெற்றது. அயலகத் தமிழர் மற்றும் தமிழர் நலனில் ஆழ்ந்த அக்கறையுடன் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செயல்திட்டத்தை முன்னெடுத்து, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆவடி நாசர் அவர்கள் (13-10-2025)திருவண்ணாமலை மாவட்டத்தில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். இக்கள ஆய்வின் போது, மறுவாழ்வு முகாம்களில் நடைபெற்று வரும் மீதமுள்ள கட்டுமானப் பணிகள் விரைவாகவும் தரமான முறையிலும் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது. முகாம் மக்கள் புதிய வீடுகளில் விரைவில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களின் இத்தொடர்பான பங்களிப்பு, அயலகத் தமிழர் நலனுக்கான அரசின் தாராள அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.இவ்வாய்வுப் பணியில் ஒத்துழைத்து செயல்பட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகத்தினருக்கும், மறுவாழ்வு முகாம் மக்கள் சார்பில் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மொபைல் நிருபர்
திரு. செல்வராஜா





