மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், கோச்சடை அருகில் வைகை ஆற்றிலிருந்து பிரியும் அவனியாபுரம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் உடன் உள்ளனர்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில் இன்று(01.11.2025) மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரமுறைத் திருத்தம் 2026 (SIR) தொடர்பான ஆய்வு கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், பொன்மேனி அருகில் வைகை ஆற்றிலிருந்து பிரியும் அவனியாபுரம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை, துவக்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





