செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர், தென்னாடு, வேடந்தாங்கல், துறையூர் மற்றும் மேலும் பல பகுதிகளில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் K.மரகதம் குமரவேல் MA .MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையான பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலங்களை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மறுப்பு தெரிவித்தல், அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், குடிநீர் தேக்க தொட்டி அமைத்தல், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுடுகாட்டு சாலை மற்றும் சுற்றுசுவர், ஊராட்சி குலத்தை சீரமைத்தல், சிமெண்ட் சாலையை தார் சாலையாக மாற்றுதல், சமுதாய நலக்கூடம் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைத்தல், அமைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை தொடர்ந்து. மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





