செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய
அலுவலகத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றிய குழு நியமன உறுப்பினர் பதவி ஆப்பூர் பகுதியை சேர்ந்த ருக்மணி அவர்களுக்கு ஏற்பதற்கான ஆணையை வழங்கி காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்
பட்டன. மேலும் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அவரவர் ஊராட்சிகளில் தேவையான பல்வேறு கோரிக்கைக்கான மனுக்களை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ஆகியோரிடம் வழங்கினார்கள்.
மேலும் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு தேவையான தீர்மானங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் குறைகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், மீனாட்சி, வட்டரா வளர்ச்சி மேலாளர் குணசேகரன் ஒன்றிய கழக செயலாளர் ஆப்பூர் பி.சந்தானம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





