கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் வடசேரி பேருந்து நிலையத்தில் (07.12.2025) ‘மகளிர் விடியல்’ திட்டத்தின் கீழ் 40 புதிய பெண்கள் சிறப்பு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன. மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்களுடன் இணைந்து கொடியசைத்து புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் திரு. என். சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரெ. மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜே. ஜி. பிரின்ஸ் (குளச்சல்), திரு. ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு) உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த 40 புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மக்கள் மற்றும் தினசரி பயணிகள் இதன்மூலம் பெரிதும் பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





