சிவகங்கை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000/- ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தையும், விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலூர் நியாயவிலை கடையில் இன்று இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். மாங்குடி அவர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, பொதுமக்கள் மத்தியில் அரசின் நலத்திட்டங்கள் சிறப்பாக சென்றடைந்து வருவதாகவும், இத்திட்டங்கள் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிகாரிகள், கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





