சிவகங்கை: உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காரைக்குடியில் குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF), தமிழ்நாடு காவல்துறை, ஊர்க்காவல் படை, விவேகானந்தா நர்சிங் கல்லூரி, எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி மற்றும் காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்திய போதை ஒழிப்பு தீப்பந்த விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியை தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீப்பந்தத்தை செல்லப்பா வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சத்யன் ஏற்றி வைத்தார்.பெரியார் சிலையில் தொடங்கிய பேரணி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்ணதாசன் மணிமண்டபம் வரை நடைபெற்றது.
அங்கு அமைச்சர் டாக்டர் பிரபு தலைமையில் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, “போதை இல்லா சமுதாயம் உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு செய்தியை வலியுறுத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




