கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்பாக கடலோரக் கிராமங்களை சேர்ந்த உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது மக்களின் நலனிற்கு எதிராகவோ அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலோ எந்தவித முடிவையும் உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல் அரசு எப்போதும் முடிவு எடுக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர்கள் மரிய வில்சன், ஸ்ரீநாத், குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





