மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.29 செல்லூரில் உள்ள மாநகராட்சி வாகன பணிமனையில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கான குப்பை அள்ளும் வாகனங்கள், டிப்பர் லாரிகள், மண்கூட்டும் வாகனம், ஜே.சி.பி. இயந்திரங்கள், மினி ரோபோட் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினந்தோறும் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழுதுப்பார்க்கப்படும் வாகனங்கள், தினந்தோறும் பயன்படுத்தப்படும் வாகனங்களை பார்வையிட்டு பணிமனையில் உள்ள டீசல் நிலையம், பதிவேடுகள், அவசரக்கால தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தன் தொடர்ந்து, ஜான்சிராணி பூங்கா பகுதியில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், காளவாசல் வெள்ளக்கண்ணு தியேட்டர் அருகில் உள்ள சாலையோர கடைகளை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆணையாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், இந்திராதேவி, உதவிப் பொறியாளர்கள் அமர்தீப், சுகாதார அலுவலர் வீரணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




