• About
  • Contact
Monday, June 22, 2026
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

அமைச்சர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

admin2 by admin2
June 22, 2026
in Latest News, Madurai District
0
அமைச்சர்  நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் அமைச்சரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான சி. டி. ஆர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மதுரை எம் பி சு வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர். பின்னர், எம்பிக்கள் இருவரும் அமைச்சரை கையைப் பிடித்து ஒருசேர நாற்காலியில் அமர வைத்தனர்.
பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் முதலில் அமைச்சர் சி டி ஆர் பேசும்போது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகம் முழுவது செயல்படும். 24 மணி நேரமும் நிர்வாகிகள் இங்கு இருப்பார்கள் அனைத்து மனுக்களும் இங்கு பெறப்படும்.


திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு அலுவலகத்தை வேறு பணிக்கு பயன்படுத்துவோம் இரண்டு அலுவலகம் இருந்தால் மக்களுக்கு சரியாக இருக்காது. சுய உதவி குழு அல்லது இசேவை மையம் போன்றவற்றிற்கு பயன்படும். நீட் தேர்வு குறித்த கேள்விக்கு: நீட் மிகப் பெரிய குளறுபடி அது தேவையில்லை என்பது தான் எங்களின் எண்ணம் மக்களுக்கு தேவையில்லாத அலைக்கழிப்பு. தேர்வை கூட ஒன்றிய அரசு சரியாக நடத்த முடியவில்லை. வினாத்தாள்களை சரியாக கொண்டு சேர்க்க முடியவில்லை மையங்களும் கம்மியாக உள்ளது. எத்தனை ஆண்டுகள் ஆகியும் தேர்வில் கூட மெச்சூரிட்டி இல்லை. மாணவர்களை தோடு கழட்டுவது துப்பட்டாவை கலட்டு என்று சொல்கிறீர்கள் ஆனால் வினாத்தாள்களை உங்களால் பத்திரமாக எடுத்து வர முடியவில்லை.


பாஜக இருக்கும் மாநிலங்கள் என்றால் இந்த தவறு கடன் இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது இந்த தேர்தலுக்கான காரணம் பூர்த்தி அடையவில்லை. இரண்டாவது முறையாக இன்று தேர்வு எழுதுகிறார்கள் கடந்த வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மோடி தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களுக்கு இரண்டு சுமை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தனியார் கொள்ளையடிப்பதற்கு நீட் கோச்சிங் சென்டர் திறக்க தான் வழி செய்கிறார்கள். பெற்றோர்களுக்கு இரண்டு மூன்று லட்ச ரூபாய் கூடுதல் செலவை செய்திருக்கிறார்கள். மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு: கர்நாடகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இதை அரசியல் ரீதியாக தான் பயன்படுத்துகிறார்கள். நாம் இதை சட்டரீதியாக தான் முன்னெடுப்போம். இங்கு இருக்கும் அனைத்து கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.


நான் , முதல்வன் திட்டம் பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு: எந்த ஸ்டிக்கரும் ஒட்டவில்லை பெயர் புரிய வேண்டும் அது திறன் மேம்பாட்டுக்கான திட்டம் நான் முதல்வன் திட்டம் என்றால் அது மக்களுக்கு புரியவில்லை. திட்டம் தொடர்கிறது பெயர் குழப்பமாக இருப்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக, திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை அதிமுக பங்காளி தான் என ஆர் எஸ் பாரதி பேசியது குறித்த கேள்விக்கு. இருவரும் எதிராக இருந்து தேர்தலை சந்தித்து விட்டு இப்பொழுது இருவரும் ஒன்று சேர நினைக்
கிறார்கள் தைரியம் இருந்தால் இருவரும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஸ்டாலின் இபிஎஸ் சேர்ந்து திமுக குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆட்சிக்கு வர நினைத்தார்கள்.


கூட்டணி குறித்து அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவெடுப்பார்கள். மாற்று கட்சியினர் தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு. இரண்டு கட்சிகளும் அவர்களின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இருவரும் குறுக்கு வழியில் வர நினைத்தார்கள் இப்போது வரை ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்களும் எடப்பாடியை சார்ந்த நபர்களும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்கள் அது பிடிக்காமல் அவர்களின் தொண்டர்கள் எல்லோரும் வந்து தமிழக வெற்றி கழகத்தை இணைகிறார்கள். புதிதாக சேர்ப்பவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்பு கொடுப்போம். தேர்தலின் போது எங்கள் தலைவரை பிரச்சாரமே செய்யவிடவில்லை தேர்தலை கொண்டு எதுவும் செய்யவில்லை பல ஆண்டுகள் திமுக அதிமுகவில் பயணித்தவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு எடப்பாடியோடு இருக்க மாட்டோம் என்று வெளியே வருகிறார்கள் அவர்கள் வரும்போது அவர்களை வரவேற்கிறோம்.

புதிதாக வருபவர்கள் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து வரவில்லை. முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்வதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு. அரசு ஆட்சி அமைந்து ஒரு மாதங்கள் தான் ஆகின்றது இதற்கான முயற்சிகள் பல மாதங்களாக நடைபெற்று முடிந்திருக்கும். அப்படி என்றால் அதற்கு காரணம் யார். ஏற்கனவே,
வந்து போனவர்கள் உன் அரசு செய்த தவறால் போய்விட்டார்கள். முன்னாடியெல்லாம் மாப்பிள்ளையும் பையனும் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்ட பிறகு தான் எதுவும் தொழில் தொடங்க முடியும். என சபரிசனையும் உதயநிதியும் குறிப்பிட்டு பேசினார். இதனால் தொழில் செய்ய முடியாமல் வேற மாநிலத்திற்கு சென்றார்கள் இது போன்ற சூழ்நிலை இனிமேல் இருக்காது.


அமைச்சர் ஆதவ் தான் பவர் சென்டர் என நயினார் கூறியது குறித்த கேள்விக்கு. முதல்வர் தான் சென்டர் அவரை தவிர்த்து எந்த சென்டரும் இல்லை. பள்ளிகள் மருத்துவமனையில் தவெகாவினர் ரீல்ஸ் வெளியிடுவது குறித்த கேள்விக்கு. பொதுமக்களுடன் சேர்ந்து நிறைய நிர்வாகிகள் பார்க்கிறார்கள் பார்க்கிறார்கள். தேவையில்லாமல் யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கும். இன்றைக்குத்தான் பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது முன்னாடி எல்லாம் தலைமைச் செயலகத்தில் புரோக்கர் தான் இருப்பார்கள் இப்போது பொதுமக்கள் சொல்கிறார்கள் அதில் தேவை இல்லாமல் தொந்தரவு செய்தால் முதல்வர் அனுமதிக்க மாட்டார். விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் மெட்ரோ திட்டம் குறித்த கேள்விக்கு. மெட்ரோ மட்டுமல்ல மதுரை மாநகராட்சி கழிவு நீர் கால்வாய்கள் கொண்டு வருவதற்கும் இரண்டு எம்பிக்கள் உடன் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அடிப்படை வசதி இல்லாமல் மதுரை இருந்தது இதற்கு முன்னால் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் காரணம் இதனை சரி செய்யும் பணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். தொடர்ந்து, எம் .பி .
சு வெங்கடேசன் பேசும்போது. ஒரு முன்மாதிரியான சட்டப்பேரவை அலுவலக இந்த அலுவலகம் இருந்து செயல்பட வேண்டும். மதுரை மாவட்டத்திற்கு மதுரை மாவட்டத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை கேட்டு கொண்டு வர வேண்டியது அமைச்சருக்கு பங்கு உண்டு. அவரது முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நாங்கள் உறுதுணையாக இருப்போம். நீட் வேண்டாம் என்பதற்கு அதன் குளறுபடிகளை அம்பலப்படுத்திக் கொண்டும் போராடிக் கொண்டும் இருக்கின்றோம்,அதேபோல மாநில அரசின் நிலைப்பாடும் நீட் என்பது தேவையில்லை என்பது தான். மாநில உரிமை பாதிக்கப்படுகிறது.

மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள் இதில் ,
காவல்துறை ஜனநாயக ரீதியாக நடந்து கொள்ள வேண்டும்.
தேசிய கீதம் இரண்டு முறை பாடுவது மரபு மீறுவது கிடையாது 20 முறை கூட பாடலாம். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் பாடப்படும். வந்தே மாதரம் பாட வேண்டும் என உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை விட்டிருந்தது தான் பிரச்சனை. வந்தே மாதிரத்தில் குறிப்பிட்ட கடவுளை வைத்து நான்கு பேராக்கள் இருக்கும் அது பாடக்கூடாது என அரசியல் நிர்ணய சபையில் முடிவெடுக்கப்பட்டது.


அது தனிமனித உரிமைக்கு எதிரானது. அடுத்தவர் உதடு என்ன பாட வேண்டும் என மோடியும் அமித்ஷாவும் முடிவு செய்ய முடியாது. தேசிய கீதத்திற்கு யாரும் எதிரானவர்கள் கிடையாது. குற்றம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் அதில் குற்றம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தொடர்ந்து, எம்பி மாணிக்கம் தாகூர் பேசும்போது: தமிழக அமைச்சர் அவையில் காங்கிரசுக்கு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியானது. மதுரையில் பொறுப்பு அமைச்சராக இருப்பதால் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது மாநகராட்சியின் வளர்ச்சி என்பது பல வகையில் தடைபட்டிருந்தாலும் இனிவரும் காலங்களில் மதுரை உண்மையிலேயே மாநகரமாக வருகின்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.


பொம்மை சொல்லி இருப்பது சிரிப்புக்குரிய விஷயம். பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அந்த தீர்மானத்தின் போது உள்ளே இருந்தார் அப்படி என்றால் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா. மேகதாது விஷயத்தில் ஒரு செங்கலை கூட கூட எடுத்து வைக்க விட மாட்டோம்.
தவெக காங்கிரஸ் உறவு நீண்ட நாள் உறவு இந்த உறவு ஒரு மூச்சுவல் ரெஸ்பெக்ட் பாஜக காரர்களின் ஆசையை நிறைவேற்றும் நிலைக்கு காங்கிரஸ் வரவில்லை. எம்பிக்கள் இருக்கும் கட்சியில் இந்தியா கூட்டணியில் இருக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு எப்போது எம்பிகள் வருகிறார்களோ அப்போது பேசுவோம் என்றார்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai District
Previous Post

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம்

admin2

admin2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

அமைச்சர்  நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

அமைச்சர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

June 22, 2026
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம்

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம்

June 22, 2026
முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

June 22, 2026
அலங்காநல்லூரில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்

அலங்காநல்லூரில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்

June 22, 2026

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.