இராமநாதபுரம்: இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த மண்ணான இராமநாதபுரம் மாவட்டத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத் தலைவரும் சமூக சேவகருமான முகமது முனீர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருது வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முகமது முனீருக்கு ‘காயிதே மில்லத் பிறை விருது’ வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தமிழ்நாடு சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சமூக சேவை, ஒற்றுமை மற்றும் மக்கள் நலப் பணிகளை பாராட்டி விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




