சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு பகுதியான காரைக்குடியில் உள்ள பாண்டியன் திரையரங்கில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகளாவிய வெளியீட்டை முன்னிட்டு திரையிடப்பட்டது. இப்படத்தின் முதல் காட்சியை தமிழ்நாடு கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டி.கே. பிரபு, ரசிகர்களுடன் இணைந்து முதல் நபராக உற்சாகத்துடன் கண்டுகளித்தார்.
இந்நிகழ்வில் பாண்டியன் திரையரங்கின் உரிமையாளரும் செல்லப்பா வித்யா மந்திர் பள்ளியின் தாளாளருமான சத்யன், கிட் & கிம் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஐயப்பன், தீயூர் கண்ணன், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் நேதாஜி சிவா, சுரேஷ், சாக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவர் சுரேஷ், முரளி, ஆதில் ராஜா, முஹம்மது மணி, சையது, துரைப்பாண்டி, வழக்கறிஞர் ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




