மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காளியம்மன் கோவில் அருகே தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு த வெக சார்பில் காளியம்மன் கோவில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். சோழவந்தான் சட்டமன்ற தொகுதி கருப்பையா
எம். எல். ஏ. இதில், ஒன்றியச் செயலாளர்கள் ஹரிஷ் கிருஷ்ணமூர்த்தி,
நகரச் செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் பாலாஜி, கருப்பையா எம்.எல்.ஏ. வுக்கு,
மூன்றடி உயரம் உள்ள முருகன் வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 52 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.
இதற்கான ஏற்பாடுகளை, த .வெ.க.ஒன்றிய கழக மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





