சிவகங்கை: தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்களின் ஆணைக்கிணங்கவும், கனிம வளத்துறை அமைச்சர் பிரபு அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். சமூக நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த முகாம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





