சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மற்றும் மாவட்ட தலைவர் ஏ.சி. சஞ்சய்காந்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காமராஜரின் சேவை மற்றும் மக்கள் நலப் பணிகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





