சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் நன்றி அறிவித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்த முப்பெரும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (ஆகஸ்ட் 2, 2026) மாலை 5.00 மணிக்கு சீரணி அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு கனிமவளம் மற்றும் இயற்கை வளங்கள்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தலைமை தாங்குகிறார். திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. சினிவாச சேதுபதி முன்னிலை வகிக்கிறார்.
சிவகங்கை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம். ஜோசப் தங்கராஜ் வரவேற்புரை வழங்குகிறார். தொடர்ந்து, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முனைவர் பேரா. சம்பத்குமார் மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் முகில் வீரப்பனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி நகரச் செயலாளர் ரா. நவவீர பிரதாப் தலைமையில் விழாக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




