மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு அமரர் பி.கே. மூக்கையாத் தேவர் பெயரை சூட்டக் கோரி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன் தேவன் தலைமையில் நிர்வாகிகள், எரிச்சத்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். நிகழ்வில் மருது தேசியக் கழக தலைவர் மருதுபாண்டியன் மற்றும் மதுரை மாவட்ட நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




