மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம்-1க்கு உட்பட்ட வார்டுகளில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் தார்ச்சாலைகள் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் அமைப்பது குறித்தும், பழுதடைந்த மற்றும் குறைந்த வெளிச்சம் தரும் தெருவிளக்குகளை மாற்றுவது குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




